பரிசுத்த வேத வினா போட்டி (Holy Bible - Tamil Quiz):
இந்த போட்டி உங்கள் Browser - ல் சரியான படி இயங்க, Browser-ல் "Third Party Cookies" என்பது ENABLE செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இது இயங்காது. எனவே தயவு செய்து இதை உறுதி செய்தபின் போட்டியை ஆரம்பிக்கவும். நன்றி.
ஆமோஸ் 8:11 இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
மேற்கண்ட பரிசுத்த வேத வசனமே இப்போட்டிக்கான அஸ்திபாரம். எனவே, கர்த்தருடைய பரிசுத்த வேதத்தை இருதயத்திலும் சிந்தையிலும் எழுதிக்கொள்வேம். சத்தியமாகிய அரைக்கச்சை, கர்த்தருடைய வேதத்திலிருந்து சூழ்நிலைக்கேற்ற, எதிரான பிசாசின் கிரியைகளை, வல்லமைகளை முறியடித்து, முடிவுவரை விசுவாசத்தில் நிலைத்திருந்து ஜெயங்கொள்ள ஏற்ற ஆவியின் பட்டயத்தை - கர்த்தருடைய வசனத்தை ஆவியானவர் நமக்கு அருளிச் செய்ய நம் இருதயம் பரிசுத்த வேத வசனத்தால் நிறைந்திருப்பது மிக அவசியம். அதற்கு உதவி செய்யவே இப்போட்டிகள்.
எபிரெயர் 8:10 அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
எனவே நம் இருதயத்தை கர்த்தருடைய வேத வசனத்தினால் நிரப்புவோம். பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே பலமாய் கிரியை செய்வார்.
கொலோசெயர் 3:16 கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; ...
ஆமென்.