- Category: Messages - Before 2012
- By J.Emmanuel JeevaKumar J.Emmanuel JeevaKumar
- Hits: 4947
இரண்டும் வேறல்ல
இரண்டு விஷயங்கள் -
- தேவனில் அன்பு கூறுவது
- வேத வசனங்களைக் கைக்கொள்வது. (வேதத்தை வாசிப்பதும் தியானிப்பதும் மட்டும் அல்ல)
கீழ்க்கண்ட வசங்களை, வேதத்தை தியானித்து பாருங்கள். சத்தியமான அவருடைய வார்த்தைகளின் ஜீவனும், பெலனும் நம் ஆத்துமாவை நிரப்பும்.
1 யோவான் 3:18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
1 கொரிந்தியர் 7:19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.
யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
யோவான்14:21 என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
யோவான்14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
யோவான்14:24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.
கர்த்தருடைய வசனங்களை நம் வாழ்வில் கைகொண்டு அவர் சித்தம் பூமியில் நிறைவேற்றி அவர் உள்ளம் மகிழ்வித்து அவரில் அன்புகூறுவோம். அவர் வருகைக்கு ஆயத்தமாயிருப்போம். பரிசுத்த ஆவியானவரே நமக்கு முற்றும் முடிய நமக்கு உதவி செய்வாராக.