Sharon Rose Ministries Sharon Rose Ministries
  • Home
  • Meditation
    • Let's Meditate
    • Praise Offering
    • Bible Quiz - தமிழில்
    • New Believers
    • For your Spiritual Life
    • Sing and Praise
  • Holy Bible
    • புதிய ஏற்பாடு (Audio Bible)
    • பரிசுத்த வேதாகமம் (புத்தக வடிவில்)
    • தமிழ் - KJV (Parallel Reading)
    • தமிழ் - NKJV (Parallel Reading)
  • About
    • Sharon Rose Ministries
    • Contact SRM
IST (UTC+5.5)
Sharon Rose Ministries Sharon Rose Ministries
  • Home
  • Meditation
    • Let's Meditate
    • Praise Offering
    • Bible Quiz - தமிழில்
    • New Believers
    • For your Spiritual Life
    • Sing and Praise
  • Holy Bible
    • புதிய ஏற்பாடு (Audio Bible)
    • பரிசுத்த வேதாகமம் (புத்தக வடிவில்)
    • தமிழ் - KJV (Parallel Reading)
    • தமிழ் - NKJV (Parallel Reading)
  • About
    • Sharon Rose Ministries
    • Contact SRM
  1. You are here:  
  2. Let's Meditate
  3. Messages - 2021
  4. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்
Category: Messages - 2021
Hits: 2196

தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்

(God was manifest in the flesh)

(கிறிஸ்துமஸ் தேவ செய்தி - 2021)


Sharon Rose Ministries

டிசம்பர் 2021 (Christmas Message December 2021)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

​


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

John 1v14

மாம்சத்திலே வெளிப்பட்ட தேவனாகிய, மாம்சமாகிய தேவ வார்த்தையாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருநாமத்தில் உங்கள் யாவருக்கும் அன்பின் கிறிஸ்து பிறந்த நன்னாள் வாழ்த்துகள்!

கிறிஸ்து இயேசுவையே கொண்டாடுவோம்!

அவருக்கே மகிமையை செலுத்துவோம்! ஆமென்.

John 1v14

 (1 தீமோத்தேயு 3:16) அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.

சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், ஒருவரும் காணக்கூடாத தேவன் இப்பூமியில் வாழும் மனுக்குலத்திற்காக தாமும் மனிதர்களைப் போல இரத்தமும் சதையும் கொண்டவராய் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் பிதாவாகிய தேவனுடைய திருக்குமாரனாய் (யோவான் 1:14) இவ்வுலகில் வந்து பிறந்ததை, கொண்டாடும் இந்த நேரத்தில், கிறிஸ்து பிறப்பின் பரிசுத்த வேத சத்தியத்தை, அதாவது பரிசுத்த வேதத்தில் கிறிஸ்து இயேசு இப்பூமியில் வந்து பிறந்ததை குறித்து எழுதியிருக்கிற உண்மைகளை சற்றே தியானித்து அறிந்து கொள்வோம். கிறிஸ்து பிறப்பின் மகத்துவங்களை உணர்ந்து கொள்வோம். விசுவாசத்தோடு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நேசிக்கிற உள்ளான அன்போடு, அவரை நமக்காக இந்த உலகத்தில் அனுப்பின பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்தி கொண்டாடுவோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே எதற்காக அவர் இந்த உலகில் வந்தார் என்பதை பரிசுத்த வேதத்தில் பல முறை சொல்லியிருக்கிறார். அவற்றை விளக்கும் கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களை கவனிப்போம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எதற்காக இந்த உலகில் வந்து பிறந்தார்?

1] தம் பிதாவின் சித்தம், விருப்பம் நிறைவேற்ற வந்தார்:

(யோவான் 3:16) தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

(சங்கீதம் 40:8) என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.

(யோவான் 6:38) என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.

(யோவான் 4:34) இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.

2] உலகில் மனித வாழ்வு  முறைக்காக கொடுக்கப்பட்ட தேவனுடைய கட்டளைகள், வழிகாட்டுதல்கள், நியாயங்கள், சாட்சிகள் அடங்கிய நியாயப்பிரமாணத்தை, தம்மை குறித்து முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களை  பூரணமாக நிறைவேற்றி முடிக்க வந்தார், அப்படியே நிறைவேற்றி நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்:

(மத்தேயு 5:17) நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

(லூக்கா 24:27) மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.

(ரோமர் 10:4) விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.

 3] சத்தியமாகிய பரிசுத்த வேத வசனங்களை குறித்து சாட்சி கொடுக்க வந்தார்:

(யோவான் 17:17) ...  உம்முடைய வசனமே சத்தியம்.

(யோவான் 18:37) ... இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.

4] மனிதர்களின் ஆத்தும பாவத்தை போக்கி, மனித குலத்தின் சகல பாவங்களையும் போக்கி, மனிதர்களை இரட்சிக்க, அவர்களை தேவனுடைய பிள்ளைகளாக்க வந்தார்:

(1 தீமோத்தேயு 1:15) பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; ...

(மத்தேயு 1:21) அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

(ஏசாயா 53:11) அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

(மத்தேயு 9:13) பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.

(1 யோவான் 3:5) அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.

5] தேவனால் படைக்கப்பட்ட முதல் மனிதன் ஆதாம் அவருடைய கட்டளையை மீறி செய்த பாவத்தினால், மனுக்குலம் முழுவதும்  இழந்து போன தேவனோடு இருந்த உறவை, உறவின் ஐக்கியத்தை, நித்திய ஜீவ வாழ்வை, தேவ சாயலை, ஜீவ ஒளியை மீட்டு மீண்டும் மனிதனுக்கு கொடுக்க வந்ததார்:

(லூக்கா 19:10) இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

(மத்தேயு 18:11) மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார்.

(மத்தேயு 20:28) அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

(ரோமர் 5:19) அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

(யோவான் 10:10) திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

(யோவான் 12:46) என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.

(யோவான் 1:4) அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

(யோவான் 8:12) மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

(யோவான் 1:9) உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.

(யோவான் 12:36) ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களை விட்டு மறைந்தார்.

 6] சரீர மரணத்தை, ஆத்தும மரணத்தை ஜெயிக்க, மனிதர்களை மரண பயத்திலிருந்து விடுவிக்க, அவர்கள்  தேவ ராஜ்யத்தில் என்றென்றும் அவரோடு வாழ்ந்திருக்க  நித்திய ஜீவனை தர வந்தார்:

(எபிரெயர் 2:14-15) ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், (15) ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.

(யோவான் 6:47) என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

(யோவான் 5:24) என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

(1 யோவான் 5:12) குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

(யோவான் 11:25) இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;

(1 கொரிந்தியர் 15:22) ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

(யோவான் 6:39) அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.

(யோவான் 6:40) குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

(யோவான் 12:50) அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

(யோவான் 8:51) ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

(யோவான் 10:27-29) என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. (28) நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. (29) அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

(1 யோவான் 5:11) தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.

(1 யோவான் 5:20) அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

7] பிசாசை தன் காலின் கீழ் மிதித்து, அவனது சகலவிதமான கிரியைகளையும்  சிலுவையிலே வெற்றி சிறக்க வந்தார்:

(ஆதியாகமம் 3:15) உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

(ரோமர் 16:20) சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

(கொலோசெயர் 2:15) துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

(1 யோவான் 3:8) பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை கொண்டாடுவது எப்படி?

ஒருவர் மீது உண்மையான அன்பும், பிரியமும் இல்லாமல் அவரை கொண்டாடி, மகிழ்ச்சியாக்குவது இயலாத காரியம். அப்படியானால், நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவைக் கொண்டாட  நம்முடைய முதல் தேவை  -   நாம் அவரை நேசிக்கிற அன்பு. அடுத்து, அவருக்கு பிரியமானதை செய்து அவர் உள்ளத்தை சந்தோஷப்படுத்துவது.

தேவனுடைய கற்பனைகள் (Commandments of God):

(மத்தேயு 22:37-39)) இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை.  இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

(யோவான் 15:12) நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.

 

(1 யோவான் 5:3) நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.

(2 யோவான் 1:6) நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.

(எரேமியா 22:3) நீங்கள் நியாயமும் நீதியும் செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள்; நீங்கள் பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமைசெய்யாமலும், இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும் இருங்கள்.

(யோவான் 14:15) நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.

(யோவான் 14:23) இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

(யோவான் 15:14) நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.

(ஒசியா 6:6) பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.

(நீதிமொழிகள் 21:3) பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்.

(பிரசங்கி 12:13) காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.

(2 கொரிந்தியர் 9:7) அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

(1 தீமோத்தேயு 2:1-3) நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; (2) நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். (3) நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

(கொலோசெயர் 1:10) சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,

(எபிரெயர் 11:6) விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

(எபிரெயர் 13:16) அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.

(சங்கீதம் 147:11) தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.

(சங்கீதம் 119:97) (மேம்.) உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.

(சங்கீதம் 69:30-31) தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன். (31) கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.

(சங்கீதம் 37:23) நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.

(நீதிமொழிகள் 11:20) மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்; உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்.

 முடிவாக:

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து  நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார்  என்பதை அவரே அன்பின் ஏக்கத்தோடு கேட்கிறார்:

(உபாகமம் 10:12-13) இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, (13) நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

(மீகா 6:8) மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

அவருடைய அன்பின் ஏக்கத்தை பூர்த்தி செய்யாமல் அவரை கொண்டாடுவது எப்படி? அவரில் பிரியமாயிருப்பது எப்படி? அவரை சந்தோஷப்படுத்துவது எப்படி?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மேகங்களின் மீது வந்து நின்று முதலாவது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களையும், அடுத்து  ஆயத்தமாயிருக்கிற தம் பிள்ளைகளையும் ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாக்கி அழைத்துச் செல்கிற இரகசிய வருகை, அதற்கு பிறகு யாவருடைய கண்களும் காண பகிரங்கமாய் இந்த உலகிற்கு வருகிற அவருடைய இரண்டாம் வருகை மிக சமீபமாய் இருக்கிறதே. ஒவ்வொரு நாளும் கடந்து செல்ல செல்ல, அவருடைய வருகையை ஒவ்வொரு நாளாக நெருங்கிக் கொண்டிருக்கிறோமே. ஒருவேளை, கடின இருதயத்தோடு, உணர்வற்றவற்றவர்களாய்  நடந்து முடிவு வரை நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நேசிக்காமல், அவருடைய பரிசுத்த வேத கட்டளைகளை உதாசீனப்படுத்தி, நிராகரித்து மனம் போல இப்பூமியில் வாழ்ந்து முடித்துவிட்டால்....அதன் பிறகு?

ஆவி, ஆன்மா மற்றும் உடலைக் கொண்ட மனிதனின் ஆவி தன்னை தந்த தேவனிடத்திற்கு சென்று சேரும், உடல் மண்ணோடு மண்ணாகும் (ஆதியாகமம் 2:7, சகரியா 12:1, பிரசங்கி 12:7, யோபு 34:14-15). 

ஆன்மா அல்லது ஆத்துமாவின் நிலை?

(யோவான் 8:47-48) தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார். (48) என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

 தேவனுக்கே சகல துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக. ஆமென்.

Meditation

  • Let's Meditate
  • Praise Offering
  • Bible Quiz - தமிழில்
  • New Believers
  • For your Spiritual Life
  • Sing and Praise

Holy Bible

  • புதிய ஏற்பாடு (Audio Bible)
  • பரிசுத்த வேதாகமம் (புத்தக வடிவில்)
  • தமிழ் - KJV (Parallel Reading)
  • தமிழ் - NKJV (Parallel Reading)

About

  • Sharon Rose Ministries
  • Contact SRM
Copyright © 2025 Sharon Rose Ministries. All Rights Reserved.