- Category: Messages - 2014
- Hits: 4526
பரிசுத்த வேத தியானம்
(Let's Meditate Word of God)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
________________________________________________________________________________________________________________________________
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
உலக இரட்சகரும், கர்த்தரும், பிதாவாகிய தேவனுடைய ஒரே சொந்த பிள்ளையுமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே, உங்கள் அனைவருக்கும் அன்பின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
தம் ஒரே சொந்த குமாரனை, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நமக்காக சிலுவையில் ஒப்புக் கொடுத்து நம்மை இரட்சித்து தம் அன்பின் உறவிலே நம்மை நிலை நிறுத்தின தேவனை பரலோகத்தின் தேவ தூதர்களோடு சேர்ந்து நாமும் துதித்து மகிமைப்படுத்துவோம்.
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். (லூக்கா 2:14)
கீழ்க்காணும் பரிசுத்த வேத வசனத்தின்படியே கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோமர் 8:32)
________________________________________________________________________________________________________________________________
தேவன் அனுப்பினவர்
அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். (யோவான் 6:28,29)
தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படியாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட மக்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்ன பதிலே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாக வந்து பிறந்ததை நினைவு கூர்ந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையே கொண்டாடும் இந்த நாளில், மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் நமக்கு மிக முக்கியமான காரியத்தை, குறிப்பாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமாக நடக்கும்படியாக, பிதாவாகிய தேவனுக்கு ஏற்ற விதமாக நான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி உள்ளத்தில் இருக்குமானால், ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே உரைத்த இந்த பரிசுத்த வேத வசனம் நமக்கு பதிலை தெரிவிக்கிறது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையை கொண்டாடுகிற இந்த நேரத்தில், அவருடைய இரண்டாம் வருகைக்கு மிக அருகில் இருக்கும் நமக்கு இந்த பரிசுத்த வேத வசன பதில் அவருடைய இரண்டாம் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்த பேருதவியாக இருக்கிறது. இதற்காக நாம் பிதாவாகிய தேவனுக்கு, சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முதலாவது நன்றி செலுத்துவோம்.
தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக (இயேசு கிறிஸ்துவுக்காக) அவருக்கு ஸ்தோத்திரம். (2 கொரிந்தியர் 9:15)
தேவாதி தேவனுடைய, பிதாவாகிய தேவனுடைய ஒரே சொந்த பிள்ளையாகிய இயேசு கிறிஸ்துவை குறித்து, அவரை விசுவாசிப்பதை குறித்து பரிசுத்த வேதத்திலிருந்து சில வசனங்களை இங்கே காண்போம். இந்த பரிசுத்த வேத வசனங்கள் நம்முடைய பல கேள்விகளுக்கும் பதிலாகவும் இருக்கிறதை நாம் அதை கருத்தோடு, பொறுமையாக, மீண்டும் மீண்டும் படிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.
தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16)
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். (ஏசாயா 9:6)
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். (யோவான் 3:17)
தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. (1 யோவான் 4:9)
குமாரனைக் (இயேசுவை) கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய (பிதாவினுடைய) சித்தமாயிருக்கிறது என்றார். (யோவான் 6:40)
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 6:47)
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; (யோவான் 11:25)
தெய்வமே இல்லை என்றோ, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய ஒரே பேரான சொந்த குமாரன் இல்லை என்றோ நினைத்து, மறுதலிப்பதை குறித்து பரிசுத்த வேதம் கூறுவது என்ன?
தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான். (1 யோவான் 5:10)
குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (யோவான் 3:36)
அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. (யோவான் 3:18)
இறுதியாக,
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. (யோவான் 20:31)