- Category: Messages - 2014
- Hits: 4017
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
யாருக்காக (புனித வெள்ளி செய்தி) கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; ... (1 பேதுரு 2:24) காணக்கூடாதவராகிய சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவன் - மெய்த்தெய்வம் - ஒரே கடவுள் - தன் ஒரே பிள்ளையை, தன் சொந்த குமாரனை மனிதரில் யாவரும் காணக்கூடியவராக, நம்மைப் போல் மனிதனாக இந்த பூமிக்கு இயேசு கிறிஸ்து என்னும் பெயரில் அனுப்பினார். இரண்டாயிரத்து பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனிதனாய் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சகித்த அவமானங்கள், எல்லோருக்கும் நல்லதே செய்தும் அவர் அனுபவித்த தீங்குகள், வியர்வை இரத்தமாய் வரும் அளவிற்கு அவர் அனுபவித்த விளக்க முடியாத துக்கங்கள், பயங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக சிலுவையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பட்ட சொல்லி முடியாத பாடுகள் இவை அனைத்தும் நமக்காக என்பதையே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் விளக்குகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்காக பட்ட பாடுகளை, சுமந்து தீர்த்தவைகளை, செய்து முடித்தவைகளை விளக்கும் மேலும் சில பரிசுத்த வேத வசனங்கள்:
ஏன் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்காக இத்தனை பாடுகளை சிலுவையில் சுமந்து தீர்க்க வேண்டும்?
எனவே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து, சிலுவையில் பட்ட பாடுகள் - ஏதோ ஒரு மனிதன், ஒரு சரித்திர புருஷன் அல்லது ஒரு நல்ல மனிதன் சிலுவையில் மரண தண்டனை அனுபவித்து மரித்து உயிர்த்தார் என்பதல்ல. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து - பிதாவாகிய தேவனுடைய குமாரன் (யோவான் 11:27), மனுக்குலத்தின், உலக மக்கள் அனைவரின் பாவம் போக்கும் பரிசுத்த பலி (1 யோவான் 2:2), பாவத்திலிருந்து மீட்கும் மீட்பர், இரட்சகர், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் கர்த்தர், என்றென்றும் அவரோடு வாழச்செய்ய நித்திய ஜீவன் அளிக்கும் தெய்வம். எனவே தான், ஆண்டவர் இயேசு கிறிஸ்து - கிறிஸ்தவர்களின் தெய்வம் மட்டும் அல்ல, அவர் : ...அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் .... (யோவான் 4:42) எனவே தான், பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். (1 யோவான் 4:14) (ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகளை குறித்த செய்தியை இங்கே காணலாம்) நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |