• Messages
  • Video
  • அந்திகிறிஸ்துவின் முத்திரையை ஏற்க தயார்

அந்திகிறிஸ்துவின் முத்திரையை ஏற்க தயார்


இது ஒரு அரிசி அளவே உள்ள மிக நுட்பமான மின்னணு Radio Frequency Identification Micro Chip. இதற்குள்ளே, உங்களைப் பற்றிய தகவல்களை பதித்து உங்கள் உடலுக்குள் நிரந்தரமாக செலுத்தப்படும். Scan செய்யும்போது, உங்களைப் பற்றிய தகவல்களை இது வெளிப்படுத்தும். மட்டுமல்ல,உலகத்தின் எந்த இடத்தில் நீங்கள் இருந்தாலும் நீங்கள் யார் என்பதையும், நீங்கள் இருக்கும் இடத்தையும் (Global Positioning System) அறிந்துகொள்ள, கண்காணிக்க முடியும்.

உலகம் அந்திகிறிஸ்துவின் முத்திரையை ஏற்க தயார் என்கிறது. அமெரிக்காவின் 20% மக்கள் நாங்கள் தயார் என்று அறிவிக்கிறார்கள். இந்த வீடியோவை கவனித்து கேளுங்கள்.மேலோட்டமாய் சரியாய், மிக பயன் அளிக்க கூடியதாய் தோன்றும் இந்த தொழில்நுட்பத்தின் ( அல்லது இதை விட இன்னும் மேலான அதி நவீன தொழில்நுட்பம் வந்தாலும், இதன்)உண்மை நோக்கத்தை, இது உண்மையில் யாருக்காக உலகத்தில் உபயோகிக்கப்படப்போகிறது என்பதை பற்றி ஆண்டவர் வேதத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படுத்தியிருக்கிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படுத்தப்பட்ட ஒன்று, இன்று நம் கண்களுக்கு முன்பாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

(வெளிப்படுத்துதல் 13: 16 - 18)

" அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,

அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.

இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. "

(வெளிப்படுத்துதல் 14: 9 - 11)

" அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,

அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.

அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது."

காரணம், ஒரே உலக அரசாங்கம், ஒரே பணம் -ஆனால் பணக்காகிதம் இல்லா சமுதாயம், ஒரே உலக மதம் அமைய வேண்டியதும் அந்திகிறிஸ்துவுக்கு மிக அவசியமான ஒன்று. ஒட்டுமொத்த உலக மக்களையும் தனித்தனியே நிர்வகிக்க, கண்காணிக்க இந்த தொழில்நுட்பம் ஏற்றது. ஒருவேளை, இதைவிட இன்னும் அதிநவீனமான தொழில்நுட்பமும்  வரலாம், வந்தாலும் அது வேதம் உரைத்தபடி - ஒவ்வொருவருடைய உடலுக்குள்  செலுத்தப்படும் அல்லது உடலின் மேல் பொறிக்கப்படும்.

விழிப்போடு நம்மை சுற்றி நடப்பைவகளை வேதத்தை கொண்டு கவனமுடன் கவனிப்போம். கர்த்தருக்குள் நம்மை ஆவியானவர் காத்துக்கொள்வாராக.

(1 தெசலோனிக்கேயர் 5:23) சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மிக சமீபித்திருக்கிறது.

ஆயத்தமாயிருப்போம், மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்.

Print Email

browsers.pnghtml5.png

Built with HTML5 and CSS3
Copyright © 2017 sharonrose.org.in
Supports all modern browsers like Firefox, Chrome, Safari, Opera and Internet Explorer above 8.