இரகசிய வருகை

(தேவனுடைய கோபாக்கினையின் கலசங்கள் (வெளி. 16) பூமியில் ஊற்றப்படும் முன்பதாக இரகசிய வருகை)

 

 

ஊற்றப்பட்டபின் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை.

 


மணவாட்டியின் பரிசுத்த அலங்காரம்

6000ஆண்டுகளுக்கு முன் தேவன் சொன்ன வார்த்தைகளின் படியே உலகம் உண்டாகி, இன்றும் நாம் அதில் வாழ்ந்து கொண்டிருப்பது உண்மையானால்,2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்டவாராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் அவருடைய இரண்டாம் வருகையைக் குறித்து வாக்குப்பண்ணின வார்த்தைகள் நிறைவேறுவதும் எவ்வளவு உண்மை.

ஒரு திருமண விழாவில் பல நூறு பேர் இருந்தாலும், மணப்பெண்ணின் ஆயத்தத்தாலும், அலங்காரத்தாலும் வெகு எளிதாக அடையாளம் காணமுடிவது போல, கர்த்தரும் நம்மை தம் பரிசுத்த மணவாட்டியாய் காணும்படி நம் ஆவிக்குரிய ஆயத்தமும், அலங்காரமும் இருக்கிறதா? யோசித்து பார்ப்போம். காரணம், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு, நாம் நல்லவர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருப்பது தகுதியல்ல. வேதத்தின் படி விசுவாசமும், பரிசுத்தமும், கர்த்தருடைய வேதத்தின் படி அனுதினமும் நடப்பதும், கடைசிவரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் நிலைத்திருப்பதுமே நமக்கு தேவை.

இந்த கிருபையின் காலத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் இனி மிக உபத்திரவமான காலம் காத்திருக்கிறது என்பதையும் நினைவில் கொள்வோம்.

அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். (வெளி 22:11)

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்றுவிரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். (2பேதுரு 3:9)

உலகம், வேதம் உரைத்தபடி அதன் முடிவை நோக்கி சென்று கொண்டிருப்பதை அறிந்து கொள்ளுங்கள். தீர்கதரிசனங்கள் நம் கண்முன்னே நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.

இனி காலம் செல்லாது; (வெளி 10:6)

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. (வெளி 22:12)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மிக சமீபமாயிருக்கிறது. ஆயத்தமாயிருப்போம், மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்.

Print

Joomla SEF URLs by Artio