IST (GMT+5.5)

HomePage BaseVerse small

  • SRM-Logo-Carousel-2017
  • Praise Jesus
  • ஸ்தோத்திர பலியிடுகிறவன் தேவனை மகிமைப்படுத்துகிறான்....(சங்கீதம் 50:23)

இன்றைய பரிசுத்த வேத வசனம்

தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர். (யோபு 36:5)

    கிருபையும் சத்தியமும்

    (கிறிஸ்துமஸ் தேவ செய்தி)


    Sharon Rose Ministries

    டிசம்பர் 2023 (Christmas Message December 2023)

    தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

    John 1v17

    நம்முடைய கர்த்தரும், உலக ரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து முதல் முறை நமக்காக இந்த உலகத்தில் வந்து மனிதனாக பிறந்ததை கொண்டாடுகிற இந்த பண்டிகை காலத்தில் கிறிஸ்து பிறப்பு நன்னாளின் அன்பின் வாழ்த்துகளை சாரோனின் ரோஜா ஊழியங்களின் சார்பாக உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    Merry Christmas & Blessed New year 2024

    கிறிஸ்து இயேசுவையே கொண்டாடுவோம்!

    தேவனுக்கே மகிமையை செலுத்துவோம்! ஆமென்.

    John 1v17

    (யோவான் 1:17) ...கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.

    மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தை குறித்தே இப்பொழுது சற்று தியானிக்கப்போகிறோம்.

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மனித குலத்திற்கு வெளிப்படுத்தப்பட்ட தேவ கிருபை. உலக இரட்சகராம் கிறிஸ்து இயேசுவின் மூலமாக இந்த தேவ கிருபையை, சத்தியத்தை எந்த வகையில்லெல்லாம் நாம் பெற்று, அனுபவித்து, வாழ்ந்து வருகிறோம்? இவ்வுலக வாழ்க்கைக்கு பிறகான நித்திய ஜீவனை நாம் பெற்றுக்கொள்ளவும் இந்த தேவ கிருபையும், சத்தியமும் நமக்கு என்ன செய்கிறது? இவற்றை முழுவதுமாக இந்த ஒரே செய்தியில் விளக்கி சொல்வது கடினம் என்றாலும், அவற்றில் சிலவற்றை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் மூலமாக நாம் விளங்கிக்கொள்ளலாம்.

    (யோவான் 3:16) தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

     (2 கொரிந்தியர் 9:15) தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.

     (யோவான் 4:10) இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.

     (ரோமர் 6:23) பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

     (1 பேதுரு 1:4-5) அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். (5) கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

    (ரோமர் 5:9) இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

    (ரோமர் 5:15) ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

    (ரோமர் 8:32) தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

     கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்து

    (நீதிமொழிகள் 16:6) கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

    பரிசுத்த வேதத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து போதித்த அவருடைய போதனைகளிலெல்லாம் கிருபையும் சத்தியமுமாகிய இவ்விரண்டும் இணைந்தே நிறைந்து நிற்பதை நாம் தெளிவாக காணலாம். சத்தியத்தை போதிக்காத, வெறும் கிருபை கிருபை என்று கூச்சலிடுகிற நவீன கால போதனைகள், இரட்சிக்கப்பட்ட பின்பும் எத்தனை பாவம் செய்தாலும், பழைய பாவ வழியிலேயே வாழ்க்கை தொடர்ந்தாலும் அவைகள் ஒன்றுமில்லை, கிருபையினாலே பரலோகம் செல்வோம் என்பது போன்ற போதனைகள்  கிறிஸ்து இயேசுவினுடயதல்ல, சத்தியமுமல்ல. கவனம், அது வஞ்சகம், அதில் விழாதிருப்போமாக. தேவ கிருபையின் மேன்மையை, அவசியத்தை குறித்து போதிக்காமல், சத்தியத்தின் பெயராலே எப்பொழுதும் கடிந்துகொண்டே இருப்பதுமான பார சுமையான, கிருபையை நிராகரிக்கிற கிரியை மட்டுமே போதிக்கிற போதனையும் பரிசுத்த வேதம் போதிக்கும் ஒன்றல்ல.

    (சங்கீதம் 85:10) கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், ...

    (சங்கீதம் 26:3) உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன்.

    (சங்கீதம் 145:17) கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.

    (யோவான் 5:14) அதற்குப்பின்பு இயேசு அவனைத் தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார். 

    (குணமாக்கப்பட்டது கிருபை, அதிக கேடானதொன்றும்  உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்ற எச்சரிப்பு சத்தியம்.)

    (யோவான் 8:10-11) இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
    (11) அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

    (விபச்சார பாவத்தை ஆண்டவர் இயேசு மன்னித்தது கிருபை, இனிப் பாவஞ்செய்யாதே என்ற எச்சரிப்பு சத்தியம்.)

    (பிரசங்கி 8:11) துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.

    (பிரசங்கி 11:9) ...உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.

    (பிரசங்கி 12:14) ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.

    (அப்போஸ்தலர் 17:30) அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

    (2 கொரிந்தியர் 5:10) ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

    (ரோமர் 2:16) என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

    (மத்தேயு 16:27) மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

    நாம் செய்த எண்ணற்ற பாவங்கள் மன்னிக்கப்பட தேவ கிருபை, பெற்ற மன்னிப்பை காத்துக்கொண்டு பரிசுத்தமும், தேவ நீதியையே நம்முடைய நீதியாக கொண்டு, நீதியின் கிரியயைகளை செய்து தேவனுக்கு பிரியமான வாழ்க்கையை நாம் வாழ வேத சத்தியம் என இவை (கிருபையும், சத்தியமும்) இரண்டுமே இணைந்து, நிறைந்து நிற்பதே கிறிஸ்தவ வாழ்க்கை. முடிவு பரியந்தம் நிலைத்து நின்று இரட்சிக்கப்பட கிருபையும் சத்தியமும் நமக்கு அருளப்பட்டிருக்கின்றன.

    (சங்கீதம் 85:10) கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.

    (சங்கீதம் 26:3) உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன்.

    தேவனாகிய கர்த்தர் படைத்த முதல் மனுஷனாகிய ஆதாமும், மனுஷியாகிய ஏவாளும் அவருடைய கட்டளையை சாத்தானின் வஞ்சகத்தினால் மீறி செய்த பாவத்தினால், பாவமும் அந்த பாவத்தினால் மரணமும் உலகத்தில் பிரவேசித்தது. மட்டுமல்ல அந்த பாவம், பூமி சபிக்கப்படவும் காரணமாகி, அந்த சாபத்திற்குள்ளனது இந்த உலகம். இதன் விளைவாக  மனிதகுலமும், மனித வாழ்க்கையும் அதாவது உலகம் முழுவதும் சகலவிதமான பாவங்களினாலும், தீங்குகளாளும், சாத்தானின் கிரியைகளாலும்  நிறைந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலைக்குள்ளிருந்து கொண்டு தான் மனித குல பாவம் மன்னிக்கப்பட்டு, இனி பாவம் செய்யாத பரிசுத்த வாழ்வு வாழவும், வேத சத்தியத்தை கைக்கொண்டு நீதிமானாகவும் வாழ வேண்டும். இது அவ்வளவு எளிதானதல்ல என்பதுமட்டுமல்ல, சற்றேறக்குறைய இயலாததும் ஆகும். இதை நம்முடைய ஒரு நாள் வாழ்வை நிதானமாக, கர்த்தருக்கு முன்பாக உண்மையாக நினைத்து பார்த்தாலே நமக்கு தெளிவாக விளங்கும்.

    இந்த நிலையில், நமக்கு

    • நிபந்தனைகளற்ற இரக்கத்தை, அந்த இரக்கத்தை பெற்றுக்கொள்ள தகுதியற்ற நமக்கு கிருபையாக அருளவும் (Unmerited favour of God – grace)
    • அந்த கிருபையினாலே, கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியே நம்முடைய நீதி என்கிற சத்தியத்தை (the ultimate truth) நமக்கு அருளிச்செய்து, அந்த வேத சத்தியம் போதிக்கும் நீதியின் கிரியைகளை இந்த உலக வாழக்கையில் நாம் செய்து வாழ

    பிதாவாகிய தேவன் கிருபையையும் சத்தியத்தையும் உலக மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக உண்டாக்கி அருளிச்செய்தார். கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்து இயேசுவினாலே வேத சத்தியத்தின்படி எல்லாவற்றையும் இந்த உலக வாழ்க்கையில் நாம் செய்து வாழ நமக்கு பெலன் உண்டு. பரிசுத்தமாக வாழவும், கர்த்தர் போதிக்கிற நீதியின் கிரியைகளை செய்யவும் நமக்கு பெலன் உண்டு. அப்படி வாழும் பொழுது, பிதாவாகிய தேவனுக்கு முன்பாக கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் பரிசுத்தவான்கள், நீதிமான்கள் (1 கொரிந்தியர் 1:31).

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியாத நிலைமையிலிருந்து, அழியாத வித்தாகிய பரிசுத்த வேத வசனத்தினாலே, போதனையினாலே பழைய பாவ வாழ்க்கையிலிருந்து மனந்திரும்பி,  நம் சொந்த ரட்சகராக, மீட்பராக, ஒரே தெய்வமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு உண்மையான இரட்சிப்பை பெற்றுக்கொண்ட பின்பும், மேலே சொல்லியிருக்கிற இதே உலகத்தில் தான் நம்முடைய ஆயுளின் காலம் வரை அல்லது கர்த்தருடைய இரண்டாம் வருகை வரை வாழப்போகிறோம். இந்த சூழ்நிலையில், பரிசுத்தமாகவும் தேவ நீதியின்படி வாழவும் நாம் அனுதினமும் முயற்சி செய்து வாழும்போது ஏற்படும் சறுக்கல்கள், தோல்விகள், சோதனைகளிலெல்லாம் நாம் தோற்று விடாமல், தேவ கோபத்திற்கு ஆளாகிவிடாமல், பிரச்சனைகள் நம்மை ஜெயித்து விடாமல்,  பிசாசினால் அழிந்து விடாமல் நம்மை தாங்கி நின்று மீண்டும் நாம் ஜெயம் பெற்று, நம் பரிசுத்த வாழ்வை கிறிஸ்து இயேசுவுக்குள் தொடரச்செய்வது அவர் மூலமாக உண்டான தேவ கிருபை மற்றும் சத்தியம்.

    (சங்கீதம் 25:10) கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்.

    (யோவான் 1:1) ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

    (யோவான் 1:14) அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

    (1 யோவான் 1:1) ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.

    (வெளிப்படுத்தின விசேஷம் 19:13) இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.

    (1 தீமோத்தேயு 3:16) அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ...

    (யோவான் 18:37) ... இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.

    தேவ கிருபை (Grace of God)

    (சங்கீதம் 145:17) கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.

    (எபேசியர் 4:7) கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.

    (லூக்கா 4:22) எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.

    (யோவான் 1:16) அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.

    (அப்போஸ்தலர் 14:3) அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்.

    (ரோமர் 5:15) ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

    (ரோமர் 5:16-17) மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது. (17) அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.

    (ரோமர் 5:20) மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.

    (ரோமர் 6:23) பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

    (2 தீமோத்தேயு 2:1) ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.

    (1 தீமோத்தேயு 1:14) நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.

    (2 தீமோத்தேயு 1:9) அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

    (2 தீமோத்தேயு 1:10) நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.

    (அப்போஸ்தலர் 20:24) ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.

    (தீத்து 3:6) தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக,

    (எபிரெயர் 10:19) ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,… (எபிரெயர் 4:16) ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

    (எபிரெயர் 13:9) பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; ...

     (2 பேதுரு 3:18) நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

     (1 பேதுரு 1:13) ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.

     சத்தியம் – உண்மை, உண்மையின் உச்சம் (the ultimate Truth)

    • கர்த்தருடைய வார்த்தை, வேதம் சத்தியம். சமூலமும் சத்தியம். சத்திய வசனம் ( சங்கீதம் 119:142, 43, 160)
    • அவருடைய வழிகள் சத்தியம் (வெளிப்படுத்தின விசேஷம் 15:3)
    • அவருடைய செய்கைகள் சத்தியம் (சங்கீதம் 33:4)
    • அவருடைய காரத்தின் கிரியைகள் சத்தியம் (சங்கீதம் 111:7)
    • அவருடைய வசனமே சத்தியம் . (யோவான் 17:17)

    (சங்கீதம் 69:13) ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரககாலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.

    (சங்கீதம் 85:10) கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.

    (2 சாமுவேல் 7:28) இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; ...

    (சங்கீதம் 19:7) கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

    (சங்கீதம் 25:5) உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.

    (சங்கீதம் 26:3) உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன்.

    (சங்கீதம் 33:4) கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.

    (யோவான் 14:6) அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

    (எபேசியர் 1:13) நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.

    (யோவான் 17:17) உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

    (யாக்கோபு 1:18) அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.

    (1 பேதுரு 1:23) அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. (லூக்கா 8:11) ...விதை தேவனுடைய வசனம்.

    நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்

    (ரோமர் 5:2) ...மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் பெற்றிருக்கிற கிருபையினாலே, தேவ சத்தியமாகிய

    (கொலோசெயர் 3:16) கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக;

    முடிவுபரியந்தம் இடைவிடாமல் அவருடைய  சத்தியத்தின்படி  செய்ய நம் இருதயத்தை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாயிருப்போம் (மத்தேயு 24:44)

     நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக பிதாவாகிய தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

    அன்பின் கிறிஸ்து பிறப்பு நன்னாள் மற்றும் இனிய புத்தாண்டு 2024 நல்வாழ்த்துகள்.

     

    Print Email

    Thou art my King, O God. (Ps 44:4)

    • Pray for Jerusalem

      இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
      எருசலேமின் சமாதானத்துக்காக
      வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.
      உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும்,
      உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)

    • Sharon-Rose-Ministries-QR- CodeHelp: Scan this image with a QR Code Reader/Scanner from your smart phone / tab.